என் அப்பன் சோதிப்பிழம்பாய் நின்று அகந்தையை அடக்கி ஞானத்தை தந்த நாள். அவனை உணரா அகந்தை கொண்டனர் தேவர்களான பிரம்மாவும் விஸ்ணுவும். வெற்றிக்கு பொய் சொன்ன படைப்பதிபதி பிம்மா. அதில் இருந்து விளங்கிக் கொள்வது. ஆணவம் மேலோங்கினால் என்ன நடக்கும். அங்கு புதிக்கு வேலை இல்லை. 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்' என்பது சான்றோர் வாக்கு. ஆணவத்தால் அழிவே ஒளிய ஆக்கம் இல்லை என்பதையும். அது ஞானத்துக்கு தடை என்பதையும் உணர்த்தவே இத்திரு விளையாடலை ஈசன் நடத்தினான். அன்றைய தினமே காத்திகைக்கு கத்திகையான திருகார்த்திகை. அன்று இறைவனிடம் ஞானத்தைவேண்டி வழிபாடு செய்தல் வேண்டும். அதனால் அகவொளி தொன்றி . ஆணவம் அடங்கி இறைக்காட்சி கிடைக்கும்.
No comments:
Post a Comment