Sunday 19 August 2018

ரங்கா ரங்கா

”ரங்கா—ரங்கா—
*இவனை ஸ்தோத்தரிக்க , ஆதிசங்கரர் வந்தார்
*இவனை ஸ்தோத்தரிக்க ஸ்ரீ மத்வர் வந்தார்
*இவனுக்கு கைங்கர்யம் செய்த ஆசார்யர்கள்,கணக்கிலடங்காது.
ஸ்ரீரங்க வாஸம் செய்து, பற்பலக் கைங்கர்யங்கள் செய்த சில ஆசார்யர்கள்

*ஸ்ரீமன் நாதமுனிகள்,
*உய்யக்கொண்டார் ,
*மணக்கால் நம்பி,

*ஸ்ரீ ஆளவந்தார்,
*திருவரங்கப் பெருமாள் அரையர்
*பெரிய நம்பிகள்,
*எம்பெருமானார் என்கிற ஸ்ரீ உடையவர்
*முதலியாண்டான்
*கந்தாடையாண்டான்,
*கூரத்தாழ்வான்,

*திருக்குருகைப் பிரான் பிள்ளான்,
*எம்பார்,
*திருவரங்கத்தமுதனார்
*ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்
*பட்டர்,
*நஞ்சீயர் ,
*நடாதூரம்மாள்
*பராங்குசதாஸர்

*பிள்ளை அமுதனார்,
*பிள்ளை உறங்காவில்லி தாஸர்
*பிள்ளை லோகாசார்யர்
*பெரியவாச்சான் பிள்ளை
*மாறனேரிநம்பி
*வங்கிபுரத்தாச்சி
*வடக்குத் திருவீதிப்பிள்ளை

*வடுக நம்பி
*நம்பிள்ளை,
*அநந்தாழ்வான்
*ஈச்வர முனிகள்
*எங்களாழ்வான்
*கூரநாராயண ஜீயர்
*சொட்டை நம்பிகள்
*திருக்கச்சிநம்பி

*திருக்கண்ணமங்கையாண்டான் ,
*திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,
*திருமாலையாண்டான்,
*திருவாய்மொழிப்பிள்ளை
*பின்பழகிய பெருமாள் ஜீயர்

*பெரிய ஆச்சான் பிள்ளை,
*அழகியமணவாளப் பெருமாள் ஜீயர் ,
*கூர குலோத்துங்க தாசர் ,
*திருவாய்மொழிப்பிள்ளை ,
*பெரிய ஜீயர் என்கிற ஸ்ரீ மணவாள மாமுனிகள்

இப்படி எண்ணிலா ஆசார்யர்கள் , இவனிடம் மோகித்து, பக்தி மேலிட்டு,
வாசிக, காயிக , லிகித கைங்கர்யங்கள் செய்துள்ளனர்

தியாகாஜ ஸ்வாமிகள், பஞ்சரத்னமே பாடி இருக்கிறார்
இவைகளை எல்லாம், கேட்டுப் பரவசமான ஜீவாத்மாக்கள் –சேதனர்கள் ,
”ரங்கா—ரங்கா—” என்று மெய்சிலிர்க்கக் கூவினர்; ஆடினர்;
ரங்கனின் புகழ் பாடினர்

ரங்கனை அடைய ஆவல் கொண்டனர் ; அவன் திருவடி நிழலில்
இளைப்பாரத் தாபப்பட்டனர்

பெரிய பெருமாள் , ஆதிசேஷனின் அரவணையில் , இவை அறிந்து ஆனந்தமடைந்தான்

நம்பெருமாளோ,
இருந்தும், கிடந்தும், நின்றும் –இங்கேயே பல்லாண்டாக நின்றும்–

அதன் பயனாக,
நம்பிள்ளைகளைத் திரும்பப் பெறுவோம் என்கிற ஆனந்தத்தில் ஸேவை சாதித்தான்

ஸ்ரீரங்கம்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்; நின்றான்

*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.

*தொண்டரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் பாசுரங்கள், பல இசைத்துப் பாட, பரவசப்பட்டான்; கிடந்தான்; நின்றான்

*மொத்தமாக 247 பாசுரங்களில், பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்

*இவன் சேர்த்தி ஸேவை தரும் ரங்கன்
*சித்ரா பௌர்ணமி அன்று, காவேரித் தாயாருடன் சேர்த்தி
*சித்திரையில், சேரகுல வல்லியுடன் சேர்த்தி
*பங்குனி ஆயில்யத்தில் , உறையூரில் கமலவல்லியுடன் சேர்த்தி,

*பங்குனி உத்ரத்தில் , பெரிய பிராட்டியாருடன் சேர்த்தி

*இவனே, காவேரி ரங்கன்
*இவனே கஸ்தூரி ரங்கன்
*இவனே பரிமள ரங்கன்
*இவனே க்ஷீராப்தி ரங்கன்
*இவனே இக்ஷ்வாகு குல ரங்கன்
*இவனே பெரியபெருமாள் ரங்கன்

*இவனே நம்பெருமாள் ரங்கன்
*இவன் கருமணி ரங்கன்
*இவன் கோமள ரங்கன்
*இவனே கோதையின் ரங்கன்
*இவனே வைபோக ரங்கன்
*இவனே முதன்முதலில், அரையர் ஸேவை கொண்டருளிய ரங்கன்

*இவனே தினமும், வெண்ணெய் அமுதுண்ணும் ரங்கன்
*இவனே ”திறம்பா ”வழிகாட்டும் ரங்கன்
*இவனே”கபா”அலங்கார ரங்கன்
*இவனே ”கோண வையாளி ”நடைபோடும் ரங்கன்
*இவனே ஐப்பசியில் , யாவும் தங்கமான ரங்கன்
*இவனே , தாயின் பரிவுடன் ”பல்லாண்டு” பாடப்பெற்ற ரங்கன்

*இவனே பங்குனியில் காவிரிக்கரையில், தயிர்சாதமும், மாவடுவும் விரும்பி ஏற்கும் ரங்கன்
*இவனே , அடியார்களை அரவணைக்கும் ரங்கன்
*இவனே வைணவத்தின் ”ஆணி வேரான ”அரங்கத்தின் அப்பன், ரங்கன்

*இவனே அடியார்க்கு ஆட்படுத்தும் ரங்கன்
*இவனே, தானே முக்தனாக இருந்து, வைகுண்ட ஏகாதசியன்று, பரமபதத்தைக் காட்டும் ரங்கன்
*இவனே பணியைப் பத்துகொத்தாக்கிப் பணிகொள்ளும் ரங்கன்

*இவனே இராமானுசரை, ”நெடுநாள் தேசாந்திரம் சென்று , மிகவும் மெலிந்தீரே” என்று தாயைவிட, அதிகப் பரிவு காட்டிய ரங்கன்