Tuesday 7 June 2016

ிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. நாள், நட்சத்திரம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னதற்கு அர்த்தமுண்டு. அப்படி திருமணத்திற்கு நாள் பார்க்கும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விதிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

முதல் விதி :

✰ திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

இரண்டாவது விதி :

✰ சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மூன்றாவது விதி :

✰ இயன்றவரை சுக்கில பட்ச (வளர்பிறைத் திதி) காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

நான்காவது விதி :

✰ புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.

ஐந்தாவது விதி :

✰ துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.

ஆறாவது விதி :

✰ முகூர்த்த லக்கினத்துக்கு 7 ஆம் இடம், முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

ஏழாவது விதி :

✰ அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

எட்டாவது விதி :

✰ திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

ஒன்பதாவது விதி :

✰ திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

பத்தாம் விதி :

✰ மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

பதினொன்றாம் விதி :

✰ கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம் நடத்தக்கூடாது.

சதயம் நட்சத்திர தோஷம் நீங்க..!

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவருணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர்.

Monday 6 June 2016

ராசி பலன்கள் 07-06-2016 இன்று

ராசி பலன்கள் 07-06-2016 இன்று
மேஷம் ராசிபலன்  7 Jun 2016
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். உங்கள் வேலையிலும், முன்னுரிமை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உங்களுடன் நேரம் செலவழிக்க முடியாத வகையில் உங்கள் துணை இன்று பிசியாக இருக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 5
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
ரிஷபம் ராசிபலன்  7 Jun 2016
உங்கள் ஆசைகள் மற்றும் லட்சியத்திற்கு பயம் காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதை சமாளிக்க உங்களுக்கு சரியான சில ஆலோசனைகள் தேவைப்படுகிறது. திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். கோபம் அதிகமாவது தவிர்க்க முடியாதது - ஆனால் உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்தாமல் இருக்க நாவைக் கட்டுப்படுத்துங்கள். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் - நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். அதிர்ஷ்ட எண்: 4
🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔
மிதுனம் ராசிபலன்  7 Jun 2016
அழுத்தம் மற்றும் பதற்றத்தை தவிர்த்திடுங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். சில த்ரில்லான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். அதிர்ஷ்ட எண்: 2
🍘🍘🍘🍘🍘🍘🍘🍘🍘
கடகம் ராசிபலன்  7 Jun 2016
கிரியேட்டிவான ஹாபிகள் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
சிம்மம் ராசிபலன்  7 Jun 2016
மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, நமக்குள்ளே இருப்பது என்பதை உணர்த்துவதால் உங்களைப் போல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். இன்று முட்டாள்தனமான காதல் உங்களுக்கு வரலாம். இன்று உங்களால் நீங்கள் வேலை செய்யும் கம்பனிக்கு பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்.. அதிர்ஷ்ட எண்: 4
🍞🍞🍞🍞🍞🍞🍞🍞🍞
கன்னி ராசிபலன்  7 Jun 2016
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கு நல்ல நேரம் இது. உங்கள் குடும்பத்தினர் அளித்த ஆதரவு மற்றும் முயற்சிகளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். சரியானவர்களிடம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினால், உங்களைப் பற்றிய புதிய நல்லெண்ணம் உருவாகி, அதிகரிக்கும். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். இன்று, உங்கள் துணையுடன் ஏற்பட்ட பிணக்கு இனிமையான நினைவுகளை நினைவு கூர்வதால் தீரும். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑
துலாம் ராசிபலன்  7 Jun 2016
நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் - அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் - கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். சொத்து பிரச்சினைகள் ஏற்படலாம். சாத்தியமானால் சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். சட்டபூர்வமாக தலையிடுவது ஆதாயம் தராமல் போகலாம். காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது - மாறாக நீங்கள் அமைதியாக இருந்து காதலர் மீதுள்ள உண்மையான உணர்வை விளக்க வேண்டும். உங்கள் சீனியர்கள் நீங்கள் கூறும் கருத்தினை இன்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.. எனவே பொறுமயுடன் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யவும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும். அதிர்ஷ்ட எண்: 5
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
விருச்சிகம் ராசிபலன்  7 Jun 2016
சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. சில த்ரில்லான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 6
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
தனுசு ராசிபலன்  7 Jun 2016
குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் - நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் - ஏதாவது காரணத்தால் - ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் - நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். ஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 3
🍖🍖🍖🍖🍖🍖🍖🍖🍖
மகரம் ராசிபலன்  7 Jun 2016
முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்களில் பிள்ளைகள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல. அதிர்ஷ்ட எண்: 3
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கும்பம் ராசிபலன்  7 Jun 2016
ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களுக்காக தியானமும் யோகாவும் செய்ய வேண்டும். கமிஷன்கள் - டிவிடெண்ட்கள் - அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை தரலாம். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள். அதிர்ஷ்ட எண்: 1
🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉
மீனம் ராசிபலன்  7 Jun 2016
உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு- நேரத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும் - உங்கள் செயல்பாடு விரிவடையும் - உங்களின் பர்சனாலிட்டி மேம்படும், அறிவு வளரும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக பண நிலைமை மேம்படும். ஆனால் குடும்பத்தில் ஒரு குழந்தையின் உடல் நலனுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். இவ்வளவு நால் நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டமென இத்தனை நாள் தட்டிக் கழித்து வந்தீர்களோ அதனை இன்று செய்ய நேரும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும். அதிர்ஷ்ட எண்: 8
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
*பஞ்சாங்கம்*
வைகாசி ~ 25~07.06.2016
செவ்வாய் கிழமை
வருடம்~ துர்முகி வருடம் { துர்முகி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது~ வஸந்த ருது
மாதம்~ வைகாசி {ரிஷப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி~ திருதியை
நாள்~செவ்வாய் கிழமை {மங்கள  வாஸரம்}
நட்சத்திரம்~ 11.56 வரை திருவாதிரை பின் புனர்பூசம்
யோகம்~ கண்டம்
அமிர்தாதி யோகம் ~ 11.56 வரை அசுப பின் சுப
கரணம்~தைதுலை 
நல்ல நேரம்~காலை 8~9&5~5.30pm
ராகு காலம்~ மாலை3: 4.30
எமகண்டம்~காலை       9~10.30am
குளிகை~மதியம்12~ 1.30
சூரிய உதயம் ~ 5.54 am
சந்திராஷ்டமம் ~ விரிச்சிகம்
சூலம்~வடக்கு   
பரிகாரம்~பால் 
இன்று ~
ரம்பாத் திரிதியை மாதவி விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் 5 நக்ஷத்திரங்களில் சஞ்சரிக்குங்காலம் பூமியெங்கும் சுபிக்ஷமழை வரும் ரம்ஜான் முதல் தேதி

ராம, லட்சுமணர்கள்

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார். 'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ''ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார். ''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன். ''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.

''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன். அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார். ''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.

சாக்ஷ£த் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன். ''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார். ''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.