Saturday 16 November 2013

ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா

ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா
என் குருசுவாமி விலயன்னூர் ஸ்ரீ மனியாமாமா அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரம்.. சத்குரு நாதனே சரணம் ஐய்யப்பா
நண்பர்களே,அய்யப்ப பத்தர்களே, கன்னி சுவாமிகளே, சரணம் ஐய்யப்பா ,
நாளை [17/11/2013] முதல் மண்டல வ்ருதம் ஆரம்பம்.. மண்டல காலத்தில் வ்ரதம் ஐய்யப்பன் நாமம், ஐய்யப்பன் பூஜை எல்லாம் மனதுக்கு சுகம், ஆனந்தம்..
மண்டலோத்சவம் மகரோத்சவம் என்பார்கள் மலையாளத்தில் இரண்டும் ஐய்யப்பன்னுக்கு உத்சவம் காலங்கள் தான் [பெரிய திருவிழாகாலங்கள் தான்]
மாலை இடும்முன் தாய் தந்தை இடம் அனுமதியும் ஆசிர்வாதமும் கண்டிப்பாக வாங்க வேண்டும் திருமணம் ஆனவர்கள் மனைவி இடம் அனுமதி வாங்க வேண்டும் பிறகு குருசுவாமி இடம் போய் பண்போடும் பணிவோடும் தன்னையும் கூட்டி சொல்ல வேண்டுமாய்.கேட்டக்க வேண்டும் அவர் அனுமதியுடன் புதிய வஸ்திரம் மாலை வாங்கி கொண்டு அவர் சொல்லும் இடத்தில் போய் அவர்பாதம் நமஸ்கரித்து, ஸ்வாமி வஸ்திரம் தரித்து மாலை போட்டு கொள்ள வேண்டும்
வீட்டில் விளக்கு ஏத்தி சுவாமிக்கு பூ மாலை சார்த்தி சரணம் சொல்லி வெத்திலை, பாக்கு, தேங்காய், பழம்,[முதல் நாள் ஆதலால் மற்றைய நாளில் தன் சக்திக்கு தகுந்தால் போல் எது முடியுமோ அது போதும் நமது சக்தி ஐய்யப்பனுக்கு தெரியும்] வைத்து நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டி தன் வேலையை பார்க்கலாம்
விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் அமைதி ஆகியவையே ஐய்யப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை பெண்களிடம் ஒரு மீட்டர் தள்ளி நீன்றே பேச வேண்டும்இதற்குஅர்த்தம் பெண்கள் குடாது என்பது அல்ல.. மனம் அலை பாய விட குடாது என்பதற்காக
..இந்த சமயத்தில் வீட்டில் ஒருநாள் பூஜை பஜனை வைப்பது நாலு ஐய்யப்ப மார் வருவது நல்லது அவன் அன்னதான பிரபு அவன் பேர் சொல்லி அன்னம் இடுவது நல்லது ஏழை பக்தர் மலைக்கு போகவேண்டும் என்கிறார். பணத்துக்காக கஷ்டப்படுகிறார் என்றால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் சால சிறந்தது
. சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் குருசுவாமியிடமும் ஐய்யப்பன் மாரிடமும் கதை கேட்பதும் நமக்கு தெரிந்ததை சொல்லுவதும் சால சிறந்தது அவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்
வ்ரத அனுஷ்டானங்கள் நிஷ்டைகள் சொல்லி கொண்டே போகலாம் சுருக்கமாக அவளவுதான் வாழ்க வளமுடன்
ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா

No comments:

Post a Comment