Saturday 16 November 2013

ஆலயத்தில் வழிபடும் முறை

ஆலயத்தில் வழிபடும் முறை

இறைவனுக்கு செய்யும் பதினாறு வகை உபசாரங்கள். ஆலயத்தில் இறைவனுக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்தவுடன் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள்.
அவற்றில் நாம் -
1. தூபத்தில்- அக்னி தேவனையும்;
2. மகாதீபத்தில்- சிவனையும்;
3. நாக தீபத்தில்- கேதுவையும்;
4. விருஷப தீபத்தில்- தர்ம தேவதையையும்;
5. புருஷாமிருக தீபத்தில்- விஷ்ணுவையும்;
6. பூரணகும்பத்தில்- ருத்ரனையும்;
7. பஞ்சதட்டுகளில்-பஞ்சபிரும்ம தேவதைகளையும்;
8. நட்சத்திர தீபத்தில்- 27 நட்சத்திரங்களையும்;
9. மேரு தீபத்தில்- 12 சூரியர்களையும்;
10. விபூதியில்- பரமேஸ்வரனையும்;
11. கண்ணாடியில்- சூரியனையும்;
12. குடையில்- சந்திரனையும்;
13. சாமரத்தில்- மகாலக்ஷ்மியையும்;
14. விசிறியில்- வாயு தேவதைகளையும்
15. ஆலவட்டத்தில்- பிரம்மாவையும்:
16. கற்பூரத்தில்- ... அதிதேவதைகளாக பாவித்து வணங்க வேண்டும்.
பொருளுணர்ந்து பூஜையை ரசிக்கும் போது தன்னால.... இறையுணர்வு வரும்.

No comments:

Post a Comment