Saturday 16 November 2013

நடை பயிற்சியின் முக்கியத்துவம்

 
இன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர்.

இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

உடல்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்

குறைந்தது 40 நிமிடம் நடந்தால் என்ன விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கம்

மூளை:

நாம் உடல்பயிற்சி செய்யத் துவங்கியவுடன் மூளை உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் அலெர்ட் சிக்னலை அனுப்புகிறது.

உடனே அதிக ஆக்சிஜன் சுவாசிக்கத் துவங்குகிறோம்.

இதயத் துடிப்பு விரைவடைகிறது. வியர்க்கத்துவங்கியவுடன் மூளை உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க என்டார்பின்களையும்,டொபொமைன்களையும் ரிலீஸ் செய்கிறது.

இது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஹேப்பி கெமிக்கல்.

நமக்கு மகிழ்ச்சியான மூடை வரவழைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது

இதயம்

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய அடுத்த வினாடியே நம் இதயம் விரைவாகத் துடிக்கத் துவங்குகிறது. ஒவ்வொரு துடிப்பிலும் அதிக ரத்தம் பம்ப் செய்யபடுகிறது.

மிக அதிக வேகத்தில் ஓடினால் நிமிடத்துக்கு 160 - 180 வரை இதயத் துடிப்பு உயர்கிறது (சராசரி 60 - 80 நிமிடத்துக்கு).

உடல்பயிற்சி செய்கையில் இதயத்துடிப்பு உயர்வதால் நார்மலாக இருக்கையில் துடிக்க வேண்டிய விகிதம் குறைந்து இதயத்துக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.

நுரையீரல்

நடக்கையில்/ ஓடுகையில் நுரையீரல் அதிகமான வேகத்தில் மூச்சு வாங்குகிறது.

இதனால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது.

உடலுக்கு எத்தனை அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறகோ அத்தனை அதிக அளவில் உடலில் இருக்கும் அசுத்தப் பொருளான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படும்

கொழுப்பு செல்கள்

நீன்ட நேரம் மெதுவாக நடந்தால் உடல் கார்போஹைட்ரே(ட்ஸை எரிப்பதை நிறுத்தி உடலில் உள் கொழுப்பு சத்தை எரிக்க துவங்குகிறது.

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய முதல் 20 நிமிடம் கார்போஹைட்ரேட்டுகளை உடல் எரிக்கும்.

அதன் பின் 21 ஆவது நிமிடத்தில் இருந்து நீங்கள் உடல்பயிற்சி செய்யும் ஒவ்வொரு வினாடியும் உடல் கொழுப்பைத் தான் எரிக்கும்.

கொழுப்பை எரிக்க எரிபொருளானஆக்சிஜன் அதிகம் தேவை.

அதனால் ஒரு அரைமணிநேரம் நடந்தபின்னர் அதிகம் மூச்சு வாங்குவதை உணரலாம்.

அது உங்கள் உடல் கொழுப்பை எரிக்கிறது என்பதற்கான அறிகுறி.

அதனால் 20 நிமிடத்தைத் தாண்டியபின்னர் நிறுத்தாமல் எத்தனை நேரம் தொடர்ந்து நடக்க முடியுமோ அதைத்

No comments:

Post a Comment