Tuesday 12 November 2013

சின்ன வயதில்

உணர்வுகளை உரசுவதை விட அறிவை உரசுவதுதான் நல்லதோர் ஆரம்பமாக அமையும் காரணம் இன்று எல்லோருமே படித்தவர்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம் உடையவர்கள் இதனை அனைத்து நல்ல உள்ளம் உள்ளவர்களும், அன்பானவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்லுகிறோம் என்று நமக்கே தெரியவேண்டும் இது தெரியாமல் இருப்பதால் தான் மனகசப்பும், சண்டைகளும்,வருகின்றன
சின்ன வயதில் இருந்து ஒற்றுமையாக இருந்த இருவர்,இன்று ஒருவர் முகம் ஒருவர் பார்ப்பது கிடையாது..ஏன்? உங்களை பிரிக்க ஒரு வேலை வெட்டியும் இல்லாத தீய சக்தி ஒன்று அதன் வேலையை நன்றாக செய்து முடித்து தள்ளி நின்று சிரிக்கிறது
இருவரும் மன அமைதியுடன் அமர்ந்து பார்த்தல் நடந்தது புரியும் இல்லை யெல் நீங்கள் படித்த படிப்பு வேஸ்ட். தயவு செய்து நிதானமாக யோசிங்கள் ..நல்லது நடக்கும்

No comments:

Post a Comment