Thursday 11 September 2014

நாம் இறந்த உடன் ஆன்மா பிரிந்து சென்று விடும்



என்னிடம் அநேக நண்பர்கள் , உயிர் உடலைவிட்டு பிரிந்த உடன் மற்றொரு உடம்பு அல்லது பிண்டத்தில் போய் சேர்ந்து பிறந்து மறு பிறப்பு எடுக்கிறது என்று கூறியுள்ளீர்கள் ,. அப்படி ஆனால் ஏன் 3-ஆம் நாள் விசேடம் ,. 16-ஆம் நாள் விசேடம் மற்றும் ஒரு வரும் முடிந்ததும் விசேடம் ஏன் வைக்கிறோம்,. ஏன் அவர்களை கொண்டாடு கிறோம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு வேண்டிய பொருட்களை வைத்து கொண்டாடுகிறோம் என்று கேட்கின்றனர் , அருமை நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
தயவு செய்து எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள் புரியும் ,. அல்லது இது பற்றிய அநேக புத்தகங்கள் உள்ளன,. அதை வாசித்து பின்பு நீங்கள் உங்கள் எதிபார்ப்புகள் , சந்தேகங்கள் விளக்கம் போன்றவற்றை கேளுங்கள் , உங்கள் மனதில் எழும் கேள்விகள் இது சம்பந்தமாக இருக்க வேண்டும் ,
நாம் இறந்த உடன் ஆன்மா பிரிந்து சென்று விடும் , ஆனால் நாம் பார்த்த உடம்பும் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்து இந்த மண்ணில் இருக்கும் , ஆனால் நாம் பார்க்காத உடம்பும் நம்மிடையே வாழ்ந்து வந்தது , அது ஆன்மாவுடன் செல்லாது , அது அதுக்கு காலம் வரும் போதுதான் பிரிந்து செல்லும் அதிலும் இரண்டு உடம்பு பந்தம் என்னும் கையிற்றால் கட்டப் பட்டது, அந்த உடம்பை பிரிக்கத்தான் மேற்கூறிய சடங்குகளும் உள்ளன ,. சம்பிரதாயமாக செய்கிறோம்

No comments:

Post a Comment