Saturday 13 September 2014

அரிச்சந்திரன் அயோத்தியை விட்டு வெளியேற்றப்படுதல்





Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


அரிச்சந்திரன் அயோத்தியை விட்டு வெளியேற்றப்படுதல்
சத்தியம் தவறாத அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை நோக்கி, அய்யாமுனிவரே! என்னிடத்திலே ஒரு காசு கூட இப்பொழுது இல்லாதபடியினால் நான் உழைத்து சம்பாதித்துத்தான் உமக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களை கொடுக்கவேண்டும் ஆகபடியினாலே எனக்கு ஒரு மண்டல காலமாகிய 48 நாட்கள் அவகாசம் தாருங்கள் நான் வெறொரு நாட்டிற்குச்சென்று உழைத்து சம்பாதித்து உங்களது கடனை அடைத்து விடுகிறேன் என்றுச்சொன்னார்.  இதைக்கேட்ட விஸ்வாமித்திரர் அப்படியானால் உங்களுடன் ஒரு தரகனை அனுப்பிவைக்கிறேன், அவனிடத்திலே எனக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களைக் கொடுத்தனுப்புங்கள் என்றுக்கூறினார். அரிச்சந்திரனும் அவ்வாறே இசைந்தார். பலநாட்கள் பசிபட்டினியுடன்  அரசபோகத்தை இழந்து பிச்சைக்காரனைப்போல அரிச்சந்திரன் தன்மனைவி சந்திரமதியோடும் தன்மகன் லோகிதாசனோடும் காசிமாநகரை நோக்கிச்செல்லும் வழியில் சரயு நதிக்கரையோரம் தங்கினர். அப்பொழுது விஸ்வாமித்திரரால் அனுப்பப்பட்ட நட்சத்திரேயர் என்னும் தரகர் அரிச்சந்திரனை அணுகி விஸ்வாமித்திரரால் அனுப்பப்பட்டுள்ள தரகர் தாம் தான் என்றும் விஸ்வாமித்திரருக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களைத்தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரிச்சந்திரன் மிகப்பணிவுடன் தரகராகிய நட்சத்திரேயரை நோக்கி அய்யா, சிறிது நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள், நான் எப்படியாவது உமது எஜமானனுக்குச்சேரவேண்டிய கடன்களைக்கொடுத்துவிடுகிறேன் அதுவரை தாங்கள் எங்களுடனேயே பயணம் செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

விஸ்வாமித்திரரின் தரகர் அரிச்சந்திரனுக்கு                             பல தொல்லைகள் கொடுத்தல்
அவ்வாறே அரிச்சந்திரனை பின் தொடர்ந்த நட்சத்திரேயர் அரிச்சந்திரனுக்கு பல தொல்லைகள் கொடுத்தார். தன்னால் நடக்கமுடியாததாகையால் தன்னை சுமந்துகொண்டு செல்லும் படியும் பணித்தார்.  அரிச்சந்திரன் நட்சத்திரேயரை நோக்கி அய்யா தரகரே ! என் மகன் லோகிதாசன் சின்னக்குழந்தை காடுமேடுகளையெல்லாம் கடந்து பசிபட்டினியால் வாடிக்கொண்டு அழுது கொண்டு வருகிறான் ஆதலால் அவனை நான் என் தோளில் சுமந்து கொண்டு வருகின்றேன் அப்படி இருக்கும் பொழுது தங்களை  நான் எப்படி சுமந்து கொண்டு வருவேன் என்று சொன்னார். அதைக்கேட்ட நட்சத்திரேயர் அதெல்லாம் முடியாது என்னை  உமது தோளில் சுமந்து கொண்டு தான் போக வேண்டும் இல்லையேல் விஸ்வாமித்திரரின் கடனை அடைக்க முடியாது என்று பொய் சொல்லி விடுங்கள் நான் இனி உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் எனவே நான் திரும்பிச்சென்றுவிடுகிறேன் என்றுச்சொன்னார். உடனே, அரிச்சந்திரன் நட்சத்திரேயரைப்பார்த்து அய்யா பெரியவரே! நான் வாய்மை தவறமாட்டேன்,  ஆதலால் கட்டாயம் உமது எஜமானனுக்கு சேரவேண்டிய கடனைக்கொடுத்து விடுகிறேன், என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி தன் தோளில் அமர்த்திக்கொண்டு பயணிக்கலானார். பயணகாலத்தில் நட்சத்திரேயர் அடிக்கடி பல்வேறு விதமாக அரிச்சந்திரனுக்குத்தொல்லைகள் கொடுத்துக்கொண்டு வந்தார். தனக்கு அடிக்கடி பசிக்கின்றதென்றும் ஆகையினால் உயர்ந்த உணவு வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அரிச்சந்திரன் காடுகளில் சுற்றித்திரிந்து பல பழவகைளை சிரமப்பட்டு பரித்துக்கொண்டு வந்து நட்சத்திரேயருக்குக்கொடுத்து அவரின் பசியை ஆற்றி தானும் தன் மனைவியும் தன் மகனும் உணவு உண்ணாமலேயே பலநாள் பட்டினியாய்  வாடிக்கொண்டு காசி மாநகரை அடைந்தார்கள்.

அரிச்சந்திரன் காசிமாநகரை அடைதல்
காசிமாநகரை அடைந்தவுடன் நட்சத்திரேயர் அரிச்சந்திரனைப்பார்த்து அய்யா அரிச்சந்திரனே!  தாங்கள் என் எஜமானனுக்குக்கொடுத்த காலகெடு முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஆகபடியினாலே உடனடியாக எமது கடனை அடைக்கும் மார்க்கத்தைத்தேடுங்கள் என்று சொன்னார்.  அரிச்சந்திரனின் மனைவியாகிய கற்புக்கரசி சந்திரமதி அரிச்சந்திரனைப்பார்த்து, சுவாமி! கடனை அடைப்பதற்கு நான் ஒரு உபாயம் சொல்கிறேன் தயவுசெய்து அதைக்கேட்டு அதன்படி நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அரிச்சந்திரனும் அவ்வாறே செய்வதாக தன் மனைவியினிடத்திலே வாக்களித்தார். சுவாமி! இந்த காசி மாநகர் வீதியிலே செல்வம் படைத்த அந்தணர்கள் பலர் இருப்பார்கள் அவர்களுக்கு அடிமை வேலை செய்ய <ஆட்கள் தேவைப்படும் ஆகையினாலே அவர்களிடம் என்னை விற்று அவர்களுக்கு ஆயுள்காலம் முழுவதும் அடிமையாக்கி அதன்மூலம் வரும் செல்வத்தைக்கொண்டு நட்சத்திரேயரின் கடனை அடைத்து விடுங்கள் என்றுச்சொன்னாள். இதைக்கேட்ட அரிச்சந்திரன் மனம் கலங்கினார். விதியின் சோதனையைக்கண்டு மனம் நெகிழ்ந்து தற்போது தமக்கு வேறு வழில்லாத படியினால் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டார்.

அரிச்சந்திரன் தன்மனைவி சந்திரமதியை விலைகூறி  விற்றல்
காசிமாநகரிலே, அந்தணர் வீதியிலே தன் மனைவியை விலை கூறி விற்றுக்கொண்டே சென்றார்.  இதைக்கண்ணுற்ற காசிமாநகர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒருவன், தனக்குச்சொந்தமான ஆடு, மாடு, கோழி போன்ற ஐந்தறிவு ஜீவன்களையோ அல்லது உயிரற்ற பொருள்களையோ விற்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் இன்றைய தினம் ஒருவர் தன் மனைவியையே விலை கூறி விற்கின்றாரே!  ஈதென்ன ஆச்சரியம், தன்னுடைய மனைவியை விற்குமளவிற்கு அவருடைய வாழ்க்கையில் துன்பம் ஏற்பட்டதோ எனப்பேசிக்கொண்டார்கள், அந்தணர் வீதியில் விஸ்வாமித்திரரால்  முன்பே நியமிக்கப்பட்ட தேவதூதர் காலகண்ட அய்யர் வடிவிலே வந்து அரிச்சந்திரனிடத்திலே  நட்சத்திரேயருக்குச்சேரவேண்டிய பொன்பொருளுக்கு ஈடான விலைக்கு வாங்கிக்கொண்டார். அரிச்சந்திரன் மீளா துயரத்துடன் சத்தியநெறிப்படி தன் மனைவியை காலகண்ட அய்யருக்கு தாரை வார்த்துக்கொடுத்தார். சந்திரமதியைப்பெற்றுக்கொண்ட காலகண்ட அய்யர் சந்திரமதியின் மகனாகிய லோகிதாசனும் தனக்குச்சொந்தம் என்று உரிமைகொண்டாடினார். ஒருவன் பசுவை விற்று விட்டபிறகு அதன் கன்றும் அவனுக்கு சொந்தமாகிறபடியினால் லோகிதாசனும் எனக்கு  அடிமையாகிறான் ஆகபடியினாலே லோகிதாசனையும் எனக்கு தாரைவார்த்துக்கொடுங்கள் என்று அரிச்சந்திரனைப்பார்த்துக்கேட்டார் காலகண்ட அய்யர். மனுதர்மத்தின்படி ஒழுகும் சத்திய சீலர் அரிச்சந்திரன் அவ்வாறே தன் மகனையும் தருவதாக வாக்களித்து தன் மகனை காலகண்ட அய்யரிடம் தாரைவார்த்துக்கொடுத்தார்.  தன் மனைவியையும், மகனையும் ஒரு சேர இழந்த அரிச்சந்திரன் மிகவும் துயரடைந்தார். தான் ஈட்டிய பொருளை நட்சத்திரேயரிடம் கொடுத்து விஸ்வாமித்திரருக்குச்சேரவேண்டிய கடனை அடைத்தார். நட்சத்திரேயர் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அரிச்சந்திரன் நட்சத்திரேயரிடம் விடைபெற்று தொடர்ந்து பயணிக்க முற்பட்டபோது நட்சத்திரேயர் அரிச்சந்திரனை தடுத்தார். அரிச்சந்திரன் நட்சத்திரேயரைப்பார்த்து அய்யா! ஏன் என்னை தடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நட்சத்திரேயர் அய்யா! தாங்கள் விஸ்வாமித்திரருக்குச்சேர வேண்டிய கடன்களை அடைத்துள்ளீர்கள் ஆனால் இத்தனை நாட்களாக நான் உங்களோடு வந்து துன்பப்பட்டு கடனைப்பெற்றுக்கொண்டுச்செல்கின்றேன் அல்லவா?  அதற்கு ஊதியமாக தரகுக்கூலியை கொடுத்துவிட்டு நீங்கள் செல்லுங்கள் என்றுச்சொன்னார்.  அரிச்சந்திரன் நட்சத்திரேயரைப்பார்த்து அய்யா! தங்களுக்கு எவ்வளவு தரகு ஊதியம் தேவை? என்று கேட்டார். அதற்கு நட்சத்திரேயர் தனக்கு பதினாறாயிரம் பொன் தரகுக்கூலியாகத்தேவை என்று கேட்டார். அரிச்சந்திரனும் அவ்வாறே தருவதாக வாக்களித்தார்.

அரிச்சந்திரன் தன்னையே விலைகூறி விற்றல்
தனிமரமாக நின்ற அரிச்சந்திரன் தரகுக்கூலியை தருவதற்காக தன்னையே விற்க முடிவு செய்தார்.  காசிமாநகர வீதிகளில் சுற்றித்திரிந்து தன்னையே விலைகூறிச்சென்றார் ஆனால் ஒருவரும் வாங்கவில்லை.  இறுதியாக  தாழ்ந்த குலமரபினர்கள் வாழும் பகுதிக்குச்சென்று தன்னை விற்றுக்கொண்டு சென்ற பொழுது காசிமாநகரின் பிரதான சுடுகாட்டைக்காவல் புரியும் வீரவாகு என்னும் தோட்டி பதினாறாயிரம் பொன்கொடுத்து அரிச்சந்திரனை வாங்கிக்கொண்டார். தான் பெற்றபொருளை நட்சத்திரேயரிடம் கொடுத்து மகிழ்வுடன் நட்சத்திரேயரை வழியனுப்பினார் அரிச்சந்திரன்.

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

 

No comments:

Post a Comment